மின் கம்பத்தில் மோதிய லாரியால் மின்சாரம் தாக்கி டீக்கடைக்காரர் பலி-சிவகாசி அருகே சோகம்

சிவகாசி : தூத்துக்குடியிலிருந்து காலியான கண்டெய்னர் லாரி ஒன்று சிவகாசி அருகே சுக்கிரவாரபட்டி தனியார் பேப்பர் மில்லுக்கு வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணியளவில் சிவகாசி – சாத்தூர் சாலையில் பாரப்பட்டி பஸ்ஸ்டாப் அருகே வந்த போது சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் கண்டெய்னர் லாரி மோதியது. இதையடுத்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதோடு மின்கம்பத்தின் வயர் சாலையில் தொங்கி கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் சாத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி டூவீலரில் வந்த அனுப்பன்குளத்தை சேர்ந்த செந்தில்குமார் (45) மின்வயரில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செந்தில்குமாருடன் பைக்கில் வந்த திருவில்லிபுத்தூரை சேர்ந்த பாஸ்கர் (55) விருதுநகர் நந்தகுமார் (25) ஆகியோர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலியான செந்தில்குமார் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் காந்தியை கைது செய்துள்ளனர்….

The post மின் கம்பத்தில் மோதிய லாரியால் மின்சாரம் தாக்கி டீக்கடைக்காரர் பலி-சிவகாசி அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: