நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பைப்லைன் அமைப்பதில் காலதாமதம்-அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பைப்லைன் அமைப்பதில் காலதாமதத்தால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் கோடையில் அதிக மழை பெய்து வந்தது. இதனால் விவசாயம் மற்றும்  பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் கிடைத்து வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக மாவட்டத்தில் குறிப்பாக நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, கந்திலி, திருப்பத்தூர் ஒன்றியங்களில் சரிவர மழை பொய்த்து போனதால், பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து தங்களை தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க நிதி ஒதுக்கி ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

மேலும், கொரோனா இரண்டாம் அலையால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பைப்லைன் அமைக்கப்படுவதை பார்த்த அப்பகுதியினர், தங்களுக்கு விடியற்காலம் பிறந்துள்ளதாக நினைத்து சந்தோஷப்பட்டனர். ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், வேதனையடைந்தனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலலை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: