குத்துச்சண்டை வீரர் பலி

புதுடெல்லி: இந்திய குத்துச்சண்டை முன்னாள் வீரர் விஜேந்தர் சிங் டிங்க்கோ (41) கடந்த சில ஆண்டாக கல்லீரல் புற்றுநோய் பாதிப்பால் தொடர் பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜனவரியில் டெல்லியின் இன்ஸ்டிடியூட் ஆப் லிவர் அண்ட் பிலியரி சயின்சஸ் (ஐ.எல்.பி.எஸ்) மருத்துவமனையில் கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். ஏப்ரல் மாதத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவருக்கு மஞ்சள் காமாலை நோய் பிரச்னையும் இருந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி டிங்க்கோ உயிரிழந்தார். கடந்த 1998ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த பதிப்பில் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இவருக்கு, 1998ம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 2013ம் ஆண்டில் பத்ம விருதும் வழங்கப்பட்டது. தற்போது அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories:

>