உலகம் அமெரிக்காவில் டிக் டாக், வி சாட் செயலிகளுக்கான தடை நீக்கம்!: டிரம்பின் நிர்வாக உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்..!! Jun 10, 2021 ஐக்கிய மாநிலங்கள் சாட் டிரம்ப் ஜோ பிடன் வாஷிங்டன்: டிக் டாக், வி சாட் செயலிகளை தடை செய்வதற்கான முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவை ரத்து செய்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். சீன மொபைல் செயலிகளான டிக் டாக், வி சாட் போன்றவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், அவற்றிற்கு தடை விதித்தார். புதியதாக இந்த செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே டிரம்ப்பின் ஆணைக்கு நீதிமன்றங்கள் தடை விதித்தன. இந்த நிலையில் டிக் டாக், வி சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் நிர்வாக உத்தரவுகளை நீக்கி தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அதே வேளையில் டிக் டாக், வி சாட் போன்ற சீன செயலிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதா? என்பதை கண்காணிக்கும் படியும் பைடன் உத்தரவிட்டிருப்பது குறிபிடத்தக்கது.
காசாவில் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்ட ஐநா: இந்திய தூதரக, இஸ்ரேல் அரசு அதிகாரிகள் அஞ்சலி
சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு
ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சு
ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல்
வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க கடும் எதிர்ப்பு.. ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே மோதல்..!!