முக்கிய செய்தி விளையாட்டு 2020-21-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி சிறந்த டெஸ்ட் தொடராக தேர்வு: ஐசிசி அறிவிப்பு Jun 09, 2021 இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி ஐசிசி துபாய்: உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை ஐசிசி தேர்வு செய்துள்ளது. இதுவரை நடந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலேயே உச்சக்கட்டமாக மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது என்பது பற்றி அறிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. இதையொட்டி 144 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பரபரப்பாகவும், திரில்லிங்காகவும் அமைந்த 16 தொடர்களை அடையாளம் கண்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் 1882-ம் ஆண்டு, 1932-ம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளும் இடம் பிடித்தன. இவற்றில் இருந்து இந்தியா-ஆஸ்திரேலியா 2001-ம் ஆண்டு தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா 2020-21-ம் ஆண்டு தொடர், இந்தியா-பாகிஸ்தான் 1999-ம் ஆண்டு தொடர், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 2005-ம்ஆண்டு ஆஷஸ் தொடர் ஆகியவை அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் இருந்து நீயா-நானா இறுதிசுற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா (2020-21), இந்தியா-பாகிஸ்தான் (1999) தொடர்கள் மல்லுகட்டின. இந்நிலையில் 2020-21-ம் ஆண்டில் நடந்த முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை தட்டிச் சென்றது.
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு ரயில்வே காவல்துறை பரிந்துரை
ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி: இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது: மே 28 வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிப்பு
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது: வழக்கில் புதிய திருப்பம்
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு
ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’
மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் மோடி உரை : வாக்கு ஜிஹாத் குறித்தும் சாடல்!
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!!