ஒன்றிய அரசின் வஞ்சக போக்கை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம்: முத்தரசன் அறிவிப்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பாஜ ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவாமல், மாநிலத்தை வஞ்சிக்கும் போக்கில் தீவிரமாக செயல்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புக்கு பேரிடர் நிதியுதவி செய்யாமலும் தடுப்பூசி மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன், வெண்டிலேட்டர் போன்றவைகளை தமிழ் நாட்டிற்கு நியாயமான அளவில் ஒதுக்காமலும் ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டுள்ள தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் அளவு குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தையும், அது தொடர்பான சொத்துக்களையும் தமிழக அரசிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி பாக்கி முழுவதையும் உடனடியாக மாநில அரசுக்கு வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து, முறையே ரூ.50 மற்றும் ரூ.40 க்கு பெட்ரோல், டீசல் விற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Related Stories: