மதுரையில் தொடர்மழை கிட்டங்கியில் உள்ள நெல்லை பாதுகாக்க அரசு நடவடிக்கை

திருப்பரங்குன்றம் : தொடர்மழை பெய்து வருவதால் மதுரை தோப்பூர் திறந்தவெளி அரசு நெல் சேமிப்பு கிட்டங்கியில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க  அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வானிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இதில் தோப்பூரில் இருந்து ஆஸ்டின்பட்டி செல்லும் வழியில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் கடந்த 5 மாத காலமாக சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் திறந்த வெளி கிட்டங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த நெல் மூட்டைகளை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க தார்ப்பாய்கள் கொண்டு மூடுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த சேமிப்பு கிடங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை. மேலும் தார்ப்பாய்கள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் மூடி பாதுகாக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. எனவே, இந்த நெல் சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து நெல் மூட்டைகளை மூடி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. து தற்போது நெல் மூட்டைகளை தார்பாய் கொண்டு மூடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: