அரசியலமைப்பு சட்டப்படி ஒன்றிய அரசு என்பது தான் சரியானது: முத்தரசன் பேட்டி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தி.நகரில் உள்ள கட்சி அலுவகலத்தில் நேற்று அளித்த பேட்டி: கொரானா முதல் அலையின்போது அதனை  நாங்கள் தான் தடுத்தோம் என படை தளபதி போன்று பிரதமர் மோடி பேசினார். ஆனால் இரண்டாம் அலையின்போது கை விரித்து விட்டார். பிரதமரின் செயல்பாடுகள் வித்தியாசமாக உள்ளது என நீதிமன்றங்கள் கூட சுட்டி காட்டியுள்ளன. தமிழ்நாட்டில் குஜராத்தை விட மக்கள் தொகை அதிகம், ஆனால் அவர்களை விட நமக்கு குறைவான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி தமிழகம் முழுவதும் கொரானா  ஊரடங்கிற்கு உட்பட்டு ஆங்காங்கே போராட்டம் நடைபெறும். சென்னையில் பாலன் இல்லத்தில் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரசியல் அமைப்பு சட்டம் கூட  ஒன்றிய அரசு என்றுதான் சொல்லுகிறது. ஆனால் அதனை பிரிவினைவாதம் என்று சொல்லுகிறார்கள். அரசியலமைப்பு சட்டப்படி ஒன்றிய அரசு என்பது தான் சரியானது அதில் என்ன தவறு பேரிடர் காலத்தில் மருந்து வழங்குவதில் மாநிலங்களுக்கிடையே பிரிவினை காட்டும் போது இந்திய அரசு ஒன்றிய அரசு என்று சொல்ல வேண்டிய தேவை வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: