இந்த நிதியாண்டில் தனியார் மயமாக்கப்படும் 2 வங்கிகள் பெயர் முடிவு: மத்திய குழுவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு

புதுடெல்லி: இந்த நிதியாண்டில் தனியார் மயமாக்கப்பட உள்ள 2 பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் பெயர்களை மத்திய அரசிடம் நிதி ஆயோக்  சமர்பித்துள்ளது. ‘நடப்பு  நிதியாண்டு பட்ஜெட்டில் 2 ந்பொதுத்துறை வங்கிகளும், ஒரு பொது  காப்பீடு நிறுவனமும் தனியார் மயமாக்கப்படும்,’ என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.   இந்த வங்கிகள், காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்யும் பொறுப்பு நிதி  ஆயோக் அமைப்பிடம் வழங்கப்பட்டு இருந்தது. இதற்காக, சிறப்பு நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில்,  தனியார் மயமாக்கப்பட உள்ள 2 பொதுத்துறை வங்கிகளும், காப்பீடு  நிறுவனமும் எவை என்பதை இந்த குழு இறுதி செய்துள்ளது. அவற்றின் பெயர்களை மத்திய அரசிடம் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் இக்குழு தெரிவித்துள்ளது. அவை எந்த வங்கிகள், காப்பீடு நிறுவனம் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: