முக்கிய செய்தி சென்னை பிளஸ்-2 தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை Jun 04, 2021 பள்ளிவாசல் அமைச்சர் முதல்வர் அமைச்சர் சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துகிறார். பிளஸ் -2 பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், பள்ளிகள் சார்பில் இணையதளம் வாயிலாக கருத்துகள் கேட்கப்பட்டன. இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனையின் போது பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பிளஸ் -2 தேர்வை நடத்துவதுதான் மாணவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என கூறி உள்ளனர். இது குறித்து சில ஆசிரியர்கள் கருத்து கூறுகையில், பிளஸ்-2 வகுப்பில் அனைவரும் தேர்ச்சி. ஆனால் மதிப்பெண் அதிகம் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வை எழுதலாம் என்கிற ஒரு முடிவை அரசு எடுத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறி உள்ளனர்.
ஒடிசாவில் 43 பேரவை தொகுதிகளுடன் 6ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை மாலை ஓய்கிறது: 58 எம்பி பதவிக்கு 889 வேட்பாளர்கள் போட்டி
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது: ஐகோர்ட் இடைக்கால உத்தரவு
பேருந்துகளை பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்தி தடை இல்லா சேவை அளிக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகள்: தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்று கண்டனத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்!!
வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம் ஜூன் மாதம் தொடக்கம்
சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பேச வேண்டாம் என நட்சத்திர பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள் : பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு உத்தரவு!!
கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம் : தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ.5 அபராதம் செலுத்த சிபிசிஎல் நிறுவனத்திற்கு உத்தரவு!!
தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள்
நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்.. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும் : ராகுல் காந்தி உறுதி
நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பே இல்லை.. கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பினார் : பிரதமர் மோடி பகீர் பேட்டி
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!!
மருத்துவத் துறையில் புதிய மைல்கல்!.. கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாக புதிய கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு..!!
பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறை சாவிகளை முடிந்தால் பிரதமர் மோடியே கண்டுபிடித்து தரட்டும் : வி.கே.பாண்டியன் பதிலடி
மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம் எதுவும் இல்லை. பிரதமரின் பேச்சில் பொய்யும் பிரிவினையும் உள்ளது : அமைச்சர் மனோ தங்கராஜ்
மரங்கள் மசோதாவை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் : உலக உயிர் பன்முகத் தன்மை தினத்தை முன்னிட்டு அன்புமணி கோரிக்கை!!