கொரோனா மருந்து பதுக்கல் கவுதம் கம்பீர் மீது நடவடிக்கை

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பாஜ எம்பி.யுமான கவுதம் கம்பீர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். கொரோனா சிகிச்சைக்குப் பயன்ப்படுத்ப்படும் ‘பேபிப்ளு’ என்ற மாத்திரையை தனது அறக்கட்டளை மூலம் இலவசமாக பலருக்கும் வழங்கினார். டெல்லியில் பேபிப்ளு தட்டுப்பாடு இருக்கும்போது, கவுதம் கம்பீருக்கு இவ்வளவு மாத்திரைகள் எப்படி கிடைத்தது என்ற சர்ச்சை எழுந்தது. இதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ பிரவீன் குமார் மீதும் மருந்துகளைப் பதுக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. டெல்லி உயர் நீதிமன்றம் சென்ற இந்த பிரச்னையால், கடும் கண்டனத்துக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு நிறுவனம் ஆளானது. இதைத் தொடர்ந்து, கவுதம் கம்பீர் அறக்கட்டளை மீதும், பிரவீன் குமார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாடு நிறுவனம் நேற்று அறிவித்தது.

Related Stories: