கோதாவரி - காவிரி இணைப்பு திட்ட வரைவு அறிக்கை தயாரிப்பு: பிரதமருக்கு எடப்பாடி நன்றி

சென்னை: தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம், கோதாவரி - காவிரி நதிகளை ஒன்றிணைக்கும் வரைவு அறிக்கையை தயாரித்து இறுதி செய்து மாநிலத்தின் கருத்துகளுக்காக அனுப்பியுள்ளது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு உங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஏனெனில், நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் தமிழகத்திற்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். தமிழக விவசாயிகளின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நதி நீர் இணைப்பு திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது தமிழகத்தின் குடிநீர் பிரச்னைகளையும் தீர்க்கும். இந்த முடிவு தமிழகத்தின் வளர்ச்சிக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Related Stories: