கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய், ரசாயனத்துடன் கப்பல் மூழ்கத் தொடங்கியது

கொழும்பு: கொழும்பு துறைமுகத்தில் தீப்பிடித்த கப்பல் 12 நாட்களுக்குப் பிறகு கடலில் மூழ்கத் தொடங்கியது. இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கடந்த மாதம் 20ம் தேதி சிங்கப்பூர் கொடியுடன் வந்த நெதர்லாந்து கப்பல் திடீரென தீப்பிடித்தது. எக்ஸ்பிரஸ் பியர்ல் எனும் பெயரிடப்பட்ட இந்த கப்பல் குஜராத்தில் ரசாயனங்கள் ஏற்பட்ட 1,486 கன்டெய்னர்களுடன் கொழும்பு புறப்பட்டு சென்றது. தீயை அணைக்கும் பணியில் இலங்கை கடற்படையுடனும், இந்திய போர்க்கப்பல்களும் இணைந்தன. தீ அணைக்கப்பட்ட நிலையில், கப்பலை இழுத்து கரைக்கு கொண்டு வர முடியவில்லை. தீயால் முழுவதும் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், தற்போது அந்த கப்பல் கடலில் மெல்ல மெல்ல மூழ்கத் தொடங்கி உள்ளது. கப்பலில் எரிபொருள் டேங்கில் 325 மெட்ரிக் டன் எரிபொருள் எண்ணெய் உள்ளது.

அதோடு அதில் உள்ள கன்டெய்னர்களில் 25 டன் ஆபத்தான நைட்ரிக் ஆசிட் ரசாயனம் உள்ளது. கப்பல் கடலில் மூழ்கி இவை அனைத்து கடல் நீரில் கலந்தால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என இலங்கை அரசு அச்சம் தெரிவித்துள்ளது. இலங்கை கடல் பகுதியில் மீன் வளத்திற்குள், ரசாயனத்தால் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இக்கப்பலில் இருந்து 2 இந்தியர்கள் உட்பட 25 ஊழியர்கள் ஏற்கனவே பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: