பூஞ்சை நோய் பாதிப்புக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவில் இருந்து குணமானவர்கள் வீட்டுக்கு சென்றாலும் தொடர் கண்காணிப்பிலோ, தொடர்பிலோ இருந்தால் ஆரம்பத்திலேயே கருப்பு பூஞ்சை நோயை கண்டுபிடித்து குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இவர்களுக்கு என்று ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். பூஞ்சை நோய் தொற்றிற்கு ஆளானவர்களுக்கு தேவையான மருந்துகளை முன்னரே இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். அதோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தமிழக முதல்வர் காப்பீடு திட்டத்தில் சில நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த அட்டவணையில் இந்த பூஞ்சை வகை நோய்களையும் சேர்த்து சிகிச்சை அளிக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: