வீட்டுக்குள் பதுக்கிய ரூ1 லட்சம் குட்கா பறிமுதல்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யாக நேற்று புதிதாகப் பொறுப்பேற்ற டாக்டர் வருண்குமாருக்கு, மீஞ்சூர் அடுத்த காட்டூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட லிங்கபையன்பேட்டையில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் மேற்பார்வையில், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் காட்டூர் காவல்நிலைய எஸ்ஐ வினோத்குமார் தலைமையில் தனிப்படையினர் லிங்கபையன்பேட்டை பகுதியில் நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையில், அவரது வீட்டிலிருந்து அரசு தடை விதித்த ரூ1 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப்பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தனிப்படை போலீசாருக்குத் தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குட்கா போதைப்பொருளை பதுக்கி விற்ற கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் குட்கா போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது, இதன் பின்னணியில் யார், யார் உள்ளனர் என தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: