ஸ்டார் ஓட்டல்களுடன் இணைந்த தனியார் மருத்துவமனைக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி:  ஸ்டார் ஓட்டல்களுடன் இணைந்து தனியார் மருத்துவனைகள்  தடுப்பூசி போடுவது அரசு  நெறிமுறைகளுக்கு எதிரானது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரே நிரந்தர தீர்வு தடுப்பூசி என்பதால் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி  அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், அரசு ஊழியர்களுக்கு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களில் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசின் விதிமுறைகளுக்கு மாறாக சில நட்சத்திர ஓட்டல்களுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள்  தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு  மத்திய சுகாதார துறை அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில், “அரசின் விதிமுறைகளுக்கு மாறாக நட்சத்திர ஓட்டல்களுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட வேண்டும்.

விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகள்  மீது சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அரசின் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி செயல்படுத்தப்படுகின்றதா என கண்காணிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Stories: