பொன்னமராவதி அருகே கண்மாயில் பிடிபட்ட நீர் நாய்-வனத்துறையிடம் ஒப்படைப்பு

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நீர்நாயை இளைஞர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கே.நெடுவயல் கிராமத்தில் தட்டான் கண்மாயில் கடந்த சில நாட்களாக அப்பகுதி கிராம மக்களை அச்சுறுத்தும் வகையில் நீர் நாய் ஒன்று சுற்றித்திரிந்தது.

இதனை பார்த்து அச்சமடைந்த கிராம மக்கள் அப்பகுதி இளைஞர்கள் சிலர் உதவியுடன் பாசன கண்மாய்க்குள் பொது மக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த நீர்நாயினை சுமார் இரண்டு மணி நேரம் போராடி பிடித்தனர். பின்னர் வனத்துறை அலுவலர் பிரகாஷ்யிடம் கிராம மக்கள் பத்திரமாக ஒப்படைத்தனர். பொதுமக்களை வெகுநாட்களாக அச்சுறுத்தி வந்தநீர் நாயினை பிடித்த இளைஞர்களை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் வெகுவாக பாராட்டினர்.

Related Stories: