நத்தம் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

நத்தம்: நத்தம் ஒன்றியத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் முத்துமீனாள் ஆய்வு செய்தார்.

வேலம்பட்டி ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நத்தம் ஒன்றியத்தில் உள்ள மொத்தம் 23 கிராம ஊராட்சிகளில் 13 ஊராட்சிகள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான காரணங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.

முன்னதாக நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேலம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் மேல்நிலைதண்ணீர் தொட்டி பம்பு ஆபரேட்டர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரெங்கராஜ், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சேதுராமன், யூனியன் ஆணையாளர் அண்ணாத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) உதயகுமார், உலுப்பகுடி வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா, ஊராட்சி தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், சிறுகுடி கோகிலாவாணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: