மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.3% ஆக அதிகரிக்கும்!: எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கையில் தகவல்..!!

டெல்லி: நாட்டின் பொருளாதாரம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 1.3 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சி காணும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் காலாண்டு மற்றும் முழு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த முடிவுகளை மத்திய புள்ளியியல் அலுவலகம் வரும் 31ம் தேதி வெளியிடவுள்ளது. இந்நிலையில் காலாண்டு வளர்ச்சி குறித்து தனது கணிப்புகளை எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ளது. EcoWrap என்ற அந்த  அறிக்கையில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.3 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த முழு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.3 சதவீதமாக இருக்கும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் EcoWrap அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் காலாண்டில் வளர்ச்சி மைனஸ் 1 சதவீதமாக இருக்கும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ள நிலையில், அதற்கு மாறாக 1.3 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று எஸ்.பி.ஐ.யின் EcoWrap அறிக்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விவரங்களை வெளியிட்டிருக்கும் 25 நாடுகளில் இந்தியா  வேகமாக வளர்ந்து வரும் 5வது நாடாக இருக்கும் என்றும் எஸ்.பி.ஐ.யின் ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: