முன்னாள் பெப்சி தலைவர்-இயக்குனர் மோகன் காந்திராமன் கொரோனாவுக்கு பலி

சென்னை: பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், இயக்குனருமான மோகன் காந்திராமன் (89), கொரோனா தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு  மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். மறைந்த மோகன் காந்திராமனுக்கு 1934ல் காந்தி கன்னியாகுமரி வந்தபோது, மோகன்தாஸ் கரம்சந்த் என்று தன் பெயரை சூட்டினார். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மூலம் இயக்குனர் ப.நீலகண்டனிடம் உதவி இயக்குனராக சேர்ந்த மோகன் காந்திராமன், பிறகு தமிழில் ‘செல்வியின் செல்வன்’, ‘வாக்குறுதி’, ‘ஆனந்த பைரவி’, ‘காலத்தை வென்றவன்’, மலையாளத்தில் ‘விமோஜன சமரம்’, ‘ஸ்வர்ண விக்ரஹம்’ ஆகிய படங்களை இயக்கினார். 1994ல் ‘கில்லாடி மாப்பிள்ளை’ என்ற படத்தில் பாண்டியராஜனின் தந்தையாக நடித்திருந்தார். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களில் பணியாற்றியுள்ளார்.

Related Stories: