முக்கிய செய்தி சென்னை யாஷ் புயல் எதிரொலி: 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு May 22, 2021 யாஷ் தெற்கு ரயில்வே சென்னை: வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் யாஷ் புயல் காரணமாக 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் ஷாலிமார் சிறப்பு ரயிர் மே 23 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷாலிமார் நாகர்கோவில் சிறப்பு ரயில் மே 26 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹவுரா கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே 24 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹவுரா சென்னை சிறப்பு ரயில் மே 24 முதலட மே 26 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. யாஷ் புயல் மே 22 ஆம் தேதி வங்க விரிகுடாவில் உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் 25ம் தீவிரமாகி, மே 26 மாலை வடமேற்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரைகளை அடைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. வளிமண்டல மற்றும் கடல் நிலைமைகள், வெப்பச்சலனத்திற்கு உகந்த சூழல் மற்றும் கடல் மேற்பப்பின் வெப்பநிலை போன்றவை காரணமாக அந்தமான் கடல் மற்றும் கிழக்கு-மத்திய மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் அருகிலுள்ள பகுதிகளில் மே 22ம் தேதி முதல் மேகமூட்டத்திற்கு சாதகமான சூழல் உருவாகிறது. மே 25 ம் தேதி ஒடிசா - மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் மிக தீவிரமான கனமழை பெய்யும் என கூறியுள்ளது.
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய அரசு காப்பாற்றுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி: பிரியங்கா போட்டியிடுவார் என கருதிய நிலையில் அமேதி தொகுதியில் கே.எல்.சர்மா நிற்கிறார்
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!