வீட்டில் பரிசோதிக்கும் கொரோனா கிட் ஜூனில் கிடைக்கும்

மும்பை: கொரோனா சோதனையை வீட்டிலேயே செய்துகொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா கிட் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களும், கொரோனா பாதித்தவர்களை கவனித்துக் கொள்பவர்களும் வீட்டிலேயே சுயபரிசோதனை செய்து கொள்ள புனேவை சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் நிறுவனம் கொரோனா கிட் ஒன்றை வடிவமைத்துள்ளது. இதில் 15 நிமிடத்தில் கொரோனா ரிசல்ட் பெறலாம். இதன் விலை ரூ.250. இந்த உபகரணத்திற்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. கோவிசெல்ப் என பெயரிடப்பட்டுள்ள இந்த கிட் தற்போது தினமும் 10 லட்சம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஜூன் 1ம் தேதிக்குள் ஒரு கோடி உபகரணம் தயாராகிவிடும் என்றும் கூறி உள்ள மைலேப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீகாந்த் படோல், அடுத்த மாதம் இது விற்பனை வரும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: