மத்திய புதியகல்வி கொள்கை ஆலோசனை கூட்டத்தை அரசு புறக்கணிப்பு: ஜவாஹிருல்லா வரவேற்பு

சென்னை: மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக பள்ளிக்கல்வித்துறை புறக்கணித்துள்ளது. இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது புதிய கல்விக் கொள்கை தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை அழைக்காமல் அரசு அதிகாரிகளை மட்டும் அழைத்து தங்களின் கருத்துக்களைத் திணித்து முடிவுகளை எடுக்கும் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த போக்கு கூட்டாட்சி தத்துவத்தைச் சிதைக்கும் நடவடிக்கையாகவே உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது.

Related Stories: