சண்டிகர்: இனவெறி கருத்து கூறிய புகாரின் அடிப்படையில் அரியானா நடிகையின் மீது எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் ஹன்சி நகரில் வசிக்கும் தலித் மனித உரிமைகளுக்கான தேசிய கூட்டணியின் தலைவர் ரஜத் கல்சன் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை முன்முன் தத்தா மீது போலீசில் புகார் அளித்தார். அதில், நடிகை முன்முன் தத்தா வெளியிட்ட வீடியோ ஒன்றில், தனது அழகை ஒப்பிட்டு, பட்டியலின சாதியினருக்கு எதிராக இனவெறி கருத்துகளை தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
