செல்லூர் ராஜூ பாராட்டு அனைவரையும் அரவணைத்து செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மதுரை:கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மதுரை மாநகர் அதிமுக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யும் பணி மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இப்பணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்எல்ஏ  துவக்கி வைத்தார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்து செல்கிறார். சக அமைச்சர்களைக் கொண்டு கொரோனோவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முதல்வர் மேலும் தீவிரப்படுத்த வேண்டும். ஆட்சியில் இருந்தபோது கர்ணன் பரம்பரையை சேர்ந்தவர்கள் போல் மக்களுக்கு உதவி செய்தோம். கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் கடந்த ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூற முடியாது. மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்தால் திமுக அரசை வரவேற்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’’ என்றார்.

Related Stories:

>