மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை

மதுரை: மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், மத நல்லிணத்திற்கு எதிராகவும் மதுரையில் இருந்து சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பதிவானதன் எதிரொலியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.

மதுரையில் மஹபூப்பாளையம், பெத்தானியாபுரம், கே.புதூர் காஜிமார் தெரு ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். அதிகாலை தொடங்கிய சோதனை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. முடிவில் லேப்டாப், ஹார்டுடிஸ்க், பென்டிரைவ், செல்போன், சிம்கார்டுகள் உட்பட 16 பொருட்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் யாரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட லேப்டாப் பென்டிரைவ்களை ஆய்வு செய்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>