டவ்-தே புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: டவ்-தே புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயலின் காரணமாக தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா, தற்போதைய நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்றுள்ளார். ஏனென்றால் அரபிக்கடலில் உருவான அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருவாகியுள்ளது.

டவ்-தே புயலை பொறுத்தவரை  மேற்கு திசையில் இருந்து நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் 18-ம் தேதி வரை மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் நீலகிரி, திண்டுக்கல், கோவை,  தேனி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே போல நாளை ஞாற்றுக்கிழமை, மற்றும் திங்கள்கிழமைகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, உள்ளிட்ட ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் அதற்க்கு தேவையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடிய விதமாகவே இந்த ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் மேற்கொண்டுவருகிறார்.

அதோடு செவ்வாய்க்கிழமை பொறுத்தவரை தேனீ திண்டுக்கல் மாவட்டங்களில் இருக்கும் எனதெரிவிக்கப்பட்டிருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை, குறிப்பாக மழை அதிகமாக பெய்யும் போது தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் வைப்பது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாறும் உணவு சார்ந்த வசதிகளை செய்து குடுப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் விதமாகவே, வானிலை ஆய்வு மைய இயக்குநர் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை செயலாளர் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

Related Stories: