சொல்லிட்டாங்க...

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைதான் சிக்கலை அதிகப்படுத்துகின்றது. தடுப்பூசி கொள்முதல் மையப்படுத்தப்பட வேண்டும்.

பிரதமர் மோடி: கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக விரைவாகவும், போர்க்கால அடிப்படையிலும் மத்திய அரசு செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளின் அடிப்படையில் பார்த்தால் கொரோனா தாக்குதலை மூன்றாவது உலகப் போராகவே கருத வேண்டியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மோடி அரசின் எதேச்சதிகார போக்கால கொரோனா நடவடிக்கையில் உறுதியற்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

Related Stories:

>