யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம்

பந்தலூர் : பந்தலூர் அருகே அரசு யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.பந்தலூர் அருகே அரசு  தேயிலை தோட்டம் டேன் டீ தேவாலா கரியசோலை சரகம் 4 பகுதியில்  கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்த பூங்கொடி (54) என்பவர் நேற்று  முன்தினம் இரவு கழிப்பறைக்கு செல்லும்போது தேயிலைத்தோட்டம் பகுதியில்  இருந்த காட்டு யானை ஒன்று பூங்கொடியை  தாக்கியதில் சம்பவ இடத்தில்  பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  தேவாலா போலீசார் மற்றும் வனத்துறையினர் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்கு  எடுத்து செல்வதற்கு முயற்சித்தபோது தொழிலாளர்கள் இறந்தவர் உடலை எடுத்து  செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.

டேன் டீ தேயிலைத்தோட்டம் பகுதியில் குடியிருப்போடு  கழிப்பறை இல்லாமல் வெகு தூரத்தில் இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள்  நடப்பதாகவும், தெருவிளக்குகள் இல்லாததால் யானை உள்ளிட்ட வனவிலங்கு  நடமாட்டம் தெரிவதில்லை என பல்வேறு பிரச்னைகளை தொழிலாளர்கள் அதிகாரிகளிடம்  தெரிவித்து உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அதிகாரிகள் தொழிலாளர்களை சமாதானம் செய்து இறந்தவர் உடலை பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இந்நிலையில் நேற்று காலை இறந்தவர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பந்தலூர் அரசு மருத்துவமனையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இறந்தவர் குடும்பத்தினரை முன்னாள் திமுக எம்எல்ஏ திராவிடமணி சந்தித்து ஆறுதல்

தொடர்ந்து வனத்துறை சார்பில் முதல் கட்ட இழப்பீடு தொகையாக ரூபாய் 50,000 ஆயிரத்தை குடும்பத்தினரிடம் அவர் வழங்கினார். அதன்பின்  வனத்துறை சார்பில் மீதம் முள்ள ரூ. 3, மூன்று லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை டேன்டீ பொதுமேலாளர் சர்சாந்தரவி மற்றும்  கூடலூர் அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன், திமுக நெல்லியாளம் நகர செயலாளர்  காசிலிங்கம் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் தேவாலா டிஸ்பி  அமிர்அகமது, ரேஞ்சர்கள் கணேசன், பிரசாத், கலைவேந்தன், டேன் டீ கோட்ட  மேலாளர்கள் ராமன், சிவகுமார், தரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: