சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் ஆம்புலன்சிலேயே 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்சிலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 6 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 845 படுக்கைவசதி உள்ளது. இந்த அனைத்து படுக்கைகளும் நிரம்பியதால் புதிதாக வரும் நோயாளிகள் பல மணி நேரம் ஆம்புலன்சிலேயே காத்திருக்கின்றனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கொரோனாவுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் இடம்போல தினந்தோறும் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறார்கள். 

அந்தளவு ஆம்புலன்சுகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையே சுற்றி சுற்றி வருகின்றன. கொரோனா 2-வது அலை தமிழகத்தை ஆட்டி படைத்து வருகிறது. தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி வருகிறார்கள். சென்னையில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. தினம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்கள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

Related Stories:

>