தினமும் 10 பேருக்கு கொரோனா சிறையில் பலூன் ஊதி கைதிகள் மூச்சுப்பயிற்சி

சேலம்: கொரோனா வைரசின் இரண்டாவது அலை தமிழக சிறைக்குள்ளும் பரவி வருகிறது. குற்றவழக்குகளில் கைது செய்யப்படுபவரை, தனிமைப்படுத்தும் வகையில் கோரண்டைன் சிறையில் வைக்கிறார்கள். 15 நாட்களுக்கு பிறகு அந்தந்த மத்திய சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள். என்றாலும் தினமும் குறைந்தது 10 கைதிகள் வரையில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றங்களுக்கு விடுப்பு வழங்கப்படவில்லை. இதனால் சிறையில் இருக்கும் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக கொரோனா பரவி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான சக்தியை அதிகரிக்கும் வகையில் சிறை கைதிகளுக்கு யோகா மற்றும் மூச்சு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒருகட்டமாக பலூன் ஊதும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பலூன் ஊதும்போது நுரையீரல் சுருங்கி விரியும் என்பதால் எளிதாக மூச்சு விடமுடியும். இந்த பயிற்சியை கைதிகள் மிகவும் ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.

Related Stories:

>