மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையத்தை வேறு இடங்களுக்கு மாற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையத்தை வேறு இடங்களுக்கு மாற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்த சிறப்பு வசதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தான் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.ஜெனரல்

அப்போது தலைமை வழக்கறிஞர் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 50,000 படுக்கைகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், மேலும் 6,000 படுக்கைகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு, ஆக்சிஜன் ஒதுக்கீட்டின் அளவு 519 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைப்பதற்கான பிரதமர் நிவாரண நிதியின் கீழ் மாநிலங்கள் நிதி கேட்டால் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து கூடுதல் இடங்களில் கிடைப்பதாக செய்தித்தாள்களில் பிடித்ததாகவும், தடுப்பூசிக்கு சர்வதேச டெண்டர் ஏதும் தமிழக அரசு வெளியிட முடிவு செய்துள்ளதா என்பது குறித்து நாளை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories:

>