இந்தியாவில் ஒரே நாளில் 4,205 பேர் கொரோனாவுக்கு பலி.. பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,876  பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 3,48,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,33,40,938 ஆக உயர்ந்தது.

* புதிதாக 4205 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,54,197 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,55,338  பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,93,82,642  ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 37,04,099 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 83.04% ஆக அதிகரித்துள்ளது.

* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆக அதிகரித்துள்ளது.

* கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 15.87% ஆக அதிகரித்துள்ளது.

* இதன் மூலம், நாட்டின் இதுவரை 17,52,35,99 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: