சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்ட அனைவருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்ட அனைவருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும்   கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணியளவில் சட்டசபை கூடியது. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றனர். அனைவருக்கும் தற்காலிக சபாநாயர் பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டசபை கூட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சட்டப்பேரவை செயலாளர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Related Stories:

>