கொரோனாவை ஒழிக்க ஒட்டக ‘ஆன்டிபாடி’

கத்தார்: கொரோனா தடுப்பூசி வெளியாகி உலகம் முழுவதும் போடப்பட்டு வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘கொரோனா நோயாளிகளை ஒட்டகங்களின் ஏற்பி செல்கள் (ஆன்டிபாடி) மூலம் குணப்படுத்த முடியும். எந்தவொரு பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் ஒட்டகத்தில் வைரஸ் ஏற்பி செல் அதன் உடம்பில் இல்லை. ஆனால், மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் ஏற்பி செல் வகைகள் உள்ளன. கொரோனா தொற்று ஏற்பி செல் மூலமே மனிதர்களில் அந்த வைரஸ் பரவுகிறது. ஒட்டகத்தின் மியூகோசா செல்லில், கொரோனா வைரஸ் செல் ஒட்டிக்கொள்ள முடியாது.

எனவே ஒட்டகத்தின் மூலம் கொரோனாவை அழிக்க முடியும். கொரோனாவை அழிப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திமில் ஒட்டகங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, கொரோனாவின் இறந்த மாதிரிகள் ஒட்டகங்களில் செலுத்தப்படுகின்றன. அவற்றில் என்ன மாறிக் கொண்டிருக்கிறது என்பதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும் ரத்த மாதிரிகள் ஆன்டிபாடிகளுக்காக எடுக்கப்படுகிறது. இதுவரை நடந்த ஆராய்ச்சியில் கிடைத்த விஷயம் என்னவென்றால், கொரோனா வைரஸ் ெதாற்றானது, ஒட்டகங்களின் உடம்பில் பரவவில்லை’ என்று தெரிவித்தார்.

Related Stories: