சென்னை மற்றும் வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரு செவிலியர்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை மற்றும் வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரு செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் இந்திராவும், வேலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் பிரேமாவும் உயிரிழந்துள்ளனர். கொரோனா பணியின் போது தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பணிபுரிந்த மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர். ஏற்கனவே மதுரையில் கருவுற்றிருந்த மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார். தொடர்ந்து தற்போது செவிலியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இன்று அதிகாலை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதயவியல் பிரிவில் இத்தனை நாட்கள் சிகிச்சையளித்து வந்த குறிப்பாக கோவிட் சிகிச்சை அளித்துவந்த 41 வயதான இந்திரா என்ற செவிலியர் ஏற்கனவே சில நாட்களாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர்.

இந்த ஒரு துயரம் அடங்குவதற்குள் 52 வயதான பிரேமா என்ற செவிலியர் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரும் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக கோவிட் பணி செய்து வந்தவர். செவிலியர்கள் பிரேமா மற்றும் இந்திரா ஆகிய இருவரும் இதுநாள் வரை கோவிட் பணி செய்து வந்தவர்கள். கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அந்தந்த மருத்துவமனைகளிலேயே சிகிச்சையில் இருந்து வந்தனர். இருவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>