தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது மத்திய அரசு

சென்னை: தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தார். மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதை தொடர்ந்து தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது கொடுக்கப்பட்டு வர கூடிய 210 மெட்ரிக் டன்னிலிருந்து 419 மெட்ரிக் டன்னாக அது உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள air water என்ற நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட கூடியது, ஈரோட்டில் இருந்து செயல்பட கூடிய national oxygen limited நிறுவனத்தில் இருந்து 38 மெட்ரிக் டன் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. சேலத்தில் உள்ள jsw steel limited நிறுவனத்தில் இருந்து 15 மெட்ரிக் டன் உள்ளிட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையங்களிலிருந்து மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு கொடுக்கப்பட கூடிய ஒதுக்கீடானது தற்போது 419ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே INOX நிறுவனத்தின் சார்பில் உற்பத்தி செய்யக்கூடியவற்றில் இருந்தும் கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்திற்கு வழங்கப்படும். தூஉ த்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் உருவாக்கப்படும் ஆக்சிஜன் வரும் போது அதன் முன்னிலை என்பது தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கக்கூடிய நிலையில் தேவைக்கேற்ப தமிழகத்திற்கு ஆக்சிஜன் அளவு அதிகரிக்கப்படும் என்று எதிர்பர்க்க்கப்படுகிறது.

Related Stories:

>