கொரோனா பரிசோதனைக்கு பிறகு பிரிய நேரிடுமோ என்ற அச்சத்தில் முதிய தம்பதி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: கொரோனா பரிசோதனை முடிவு எதிர்மறையாக வந்தால் பிரிய நேரிடமோ என்ற அச்சத்தில் வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்மதுரவாயலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயல் வேல்நகரை சேர்ந்த 70 வயது முதியவர் அர்ச்சுனன், அவரது மனைவி அஞ்சலாட்சிக்கு திருமணம் ஆனதில் இருந்து குழந்தைகள் இல்லை அண்மையில் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அருகில் இருக்கும் உறவினர்கள் உணவு சமைத்துகொண்டுவந்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் உறவினர் ஒருவர் வழக்கம் போல உணவு கொடுக்க வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக அவர் பார்த்தபோது தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உறவினர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் வந்து சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் 3 தினங்களுக்கு முன் அஞ்சலாட்சிக்கு உடல்நலம் சரியில்லாததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக தெரிகிறது. ஒருவேளை கொரோனா உறுதியானால் இருவரும் பிரிய நேரிடமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு இறந்ததாக தெரிய வந்துள்ளது. கொரோனா அச்சத்தாலும் பிரிய நேரிடமோ என்ற பதைப்பதைப்பிலும் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது மதுரவாயல் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: