தமிழகத்தில் இன்றும் நாளையும் சலூன் கடைகள் இயங்க அனுமதி : 24 நேரமும் பேருந்துகளும் இயக்கம்!!

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்தார். ஊரடங்கின் போது தேநீர் கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்டவை பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் சலூன் கடைகள் திறக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து, கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் பொதுமக்களும் நிறுவனங்களும் தமக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்றும் நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. முழு ஊரடங்கின் போது, சலூன் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் நாளையும் நாளை மறுநாளும் சலூன் கடைகள் இயங்குமா என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

இந்த நிலையில், சலூன் கடைகள் இன்றும் நாளையும் இயங்கலாம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முழு பொது முடக்கம் திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் அனைத்து கடைகள் இன்றும் நாளையும் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது 24 மணி நேரமும் பேருந்து சேவை இன்றும் நாளையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: