கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படத்திற்கு மலர் தூவியபோது கண் கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் : தாயாரிடம் ஆசி பெற்றார்!!

சென்னை : கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படத்திற்கு மலர் தூவியபோது மு.க.ஸ்டாலின் கண் கலங்கினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து 33 தமிழக அமைச்சர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதன்முதலாக தனது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின். அங்கிருந்த அவரின் தந்தை கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது கருணாநிதி உயிரோடு இல்லாததை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட ஸ்டாலின் கண் கலங்கினார்.கண் கலங்கிய ஸ்டாலினுக்கு நம்பிக்கையூட்டினார் அவரது சகோதரி செல்வி. தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் இருந்த தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

Related Stories:

>