திருச்சியில் கொரோனா பரவலை தடுக்க காந்தி மார்க்கெட் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு மாற்றம்

திருச்சி: திருச்சியில் கொரோனா பரவலை தடுக்க காந்தி மார்க்கெட் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சியை பொறுத்தவரையில் காந்தி காய்கறி மார்க்கெட் பொதுவாகவே கூட்டநெரிசல் அதிகமுள்ள பகுதியாக இருக்கக்கூடிய சூழலில் தற்போது கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக காந்தி காய்கறி மார்க்கெட் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் நாளை பகல் 12 மணி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. காந்தி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பால் திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்து மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருச்சியில் இதுவரை 26,156 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 22,335 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருச்சியில் நேற்று ஒரே நாளில் 652 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3,586 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 235 பேர் திருச்சியில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: