கர்நாடகாவில் மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் வருகின்ற மே 12ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனா தினசரி பாதிப்பு 40,000யை தாண்டியுள்ளது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வந்தால் மே 12ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே உத்திரப்பிரதேசத்தில் மே 10ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: