வாக்குப்பெட்டி எண் மாறிவிட்டது!: திருமங்கலம் தொகுதி தேர்தல் அலுவலரிடம் திமுக முகவர்கள் வாக்குவாதம்..!!

மதுரை: திருமங்கலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் நடப்பதாக திமுகவினர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். மதுரை தமிழ்நாடு பாலிடெக்னீக் கல்லூரியில், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கப்படை கிராமத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடி இயந்திரத்தின் பெட்டி எண் மாறி இருப்பதாக திமுக முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

10 சுற்றின் முடிவில், மொத்தம் 70,397 வாக்குகள் எண்ணப்பட்டு அதில் அதிமுக வேட்பாளர் 29,891 வாக்குகளும், திமுக வேட்பாளர் 28,980 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 3,998, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 1,694 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 4,418 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் நோட்டாவுக்கு 355 வாக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 911 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். 

தொடர்ந்து வாக்குப்பெட்டியில் குளறுபடி இருப்பதாக கூறி திமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டு சண்டை போடுவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக திருமங்கலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது. 

Related Stories: