அமெரிக்காவில் ஒரே இரவில் சுழன்றடித்த 10க்கும் மேற்பட்ட சூறாவளி புயல்கள் : பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் ஒரே இரவில் சுழன்றடித்த 10க்கும் மேற்பட்ட சூறாவளி புயல்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை சூறாவளி காற்று போன்ற இயற்கை சீற்றங்கள் தாக்குவது என்பது புதிதல்ல. என்றாலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் 7 மாகாணங்களை வரிசைத்த வரிசைக்கட்டி தாக்கிய 10க்கும் மேற்பட்ட சூறாவளி புயல்களால் 8.5 கோடி மக்கள் கதிகலங்கி போயுள்ளனர். அமெரிக்காவின் தெற்கில் அமைந்துள்ள மிஸிஸிப்பி, அலபாமா, அர்க்கன்சாஸ், இந்தியானா, டெனென்சி உள்ளிட்ட 7 மாகாணங்களை சூறாவளி புயல்கள் துவம்சம் செய்தன.

மணிக்கு 170 கிமீ வேகத்தில் சுழன்றடித்த புயல் காற்றால் வீடுகள், வணிக வளாகங்களின் மேற்கூரைகள் தூக்கி எறியப்பட்டன.பல ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 1000த்திற்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகள் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்தன. சூறாவளி காற்றைத் தொடர்ந்து கனமழையும் பெய்தது. இதனால் பல விபத்துகளில் பலர் படுகாயம் அடைந்தனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூறாவளி புயல்களால் பல கோடி ரூபாய் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் ஒரே இரவில் சுழன்றடித்த 10க்கும் மேற்பட்ட சூறாவளி புயல்கள் : பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: