குளித்தலை அருகே மாட்டிற்கு தீவனமாக வைத்திருந்த சோளத்தட்டையில் தீ ரூ.60 ஆயிரம் சேதம்-போலீசார் விசாரணை

குளித்தலை : குளித்தலையில் மாட்டிற்கு தீவனமாக வைத்திருந்த சோளத்தட்டையில் தீ ப்பிடித்தது. இதனால் ரூ,60 ஆயிரம் மதிப்புள்ள சோளத்தட்டை சேதமானது. இது குறித்த வியாபாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாட்டு வியாபாரி ரவி. இவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தற்போது வை புதூர் கிராமத்தில் சொந்தமாக நிலம் வாங்கி அருகில் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறார், தற்போது ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள சோளத்தட்டையை மாட்டிற்கு தீவனப்பயிர் ஆக வாங்கி வந்து வீட்டருகில் அடுக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் மர்ம நபர்களால் சோளத்தட்டையில் தீ பற்ற வைக்கப்பட்டு, கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது, இதை கண்ட அருகில் உள்ள பொதுமக்கள் அணைக்க முயற்சி செய்தும் அணைக்க முடியவில்லை. இது குறித்து முசிறி தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர், இது குறித்து மாட்டு வியாபாரி ரவி குளித்தலை போலீசில் தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: