வத்திராயிருப்பு வங்கியில் சமூக இடைவெளி ‘மிஸ்சிங்’-வாடிக்கையாளர்களுக்கு கொரோனா அபாயம்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் உள்ள ஸ்டேட் பேங்க் கிளையில் வாடிக்கையாளர்கள்  சமூக இடைவெளியின்றி குவிவதால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வத்திராயிருப்பில்  ஸ்டேட் பேங்க் வங்கிக் கிளை உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு  வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி நேரம் மட்டுமே செயல்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.  மேலும், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது கைகளை சோப்பு போட்டு  கழுவ வேண்டும். ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ஏடிஎம்  மையங்களில் பணம் எடுக்க வேண்டும். இவ்வாறு வங்கிகளில் வாடிக்கையாளர்கள்  கூடாமல் இருக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  வத்திராயிருப்பில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கிக் கிளையில் நேற்று காலை சமூக  இடைவெளியின்றி குவிந்தனர். அவர்களுக்கு டோக்கன் கொடுத்து பணப்பரிவர்த்தனை  செய்யப்பட்டது. இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,  ஸ்டேட் பேங்க் வங்கிக் கிளையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: