பிரிட்டனில் 44 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!: தேசிய சுகாதார சேவை மையம் அறிவிப்பு..!!

லண்டன்: பிரிட்டனில் 44 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியிருப்பதாகவும் தேசிய சுகாதார சேவை மையம் அறிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றையும் ஆட்டி படைத்து வருகிறது. இந்த வைரஸை எதிர்க்க ஒரே தீர்வு தடுப்பு மருந்து என விஞ்ஞானிகள் தெரிவித்தன் பேரில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு முனைப்புடன் செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் பிரிட்டனில் 44 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 44 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்கள் பெயர்களை இன்று முதல் பதிவு செய்துக்கொள்ளலாம் என்றும் இந்த பிரிவை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் பிரிட்டிஷ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

44 வயதிற்கு மேற்பட்டோர் தங்கள் பெயரை பதிவு செய்தவுடன் கொரோனா தடுப்பூசி போடும் தேதி மற்றும் விவரங்கள், அவர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன் அடிப்படையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் முதல் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: