காட்டு யானைகள் அட்டகாசத்தால் குடியிருப்புகளை காலி செய்யும் டேன் டீ தொழிலாளர்கள்

பந்தலூர் : பந்தலூர் அருகே அரசு தேயிலைத்தோட்டம் கொளப்பள்ளி டேன்டீ பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக டேன்டீ தொழிலாளர்கள் குடியிருப்புகளை காலி செய்து வருகின்றனர். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்காக டேன்டீ உறுவாக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த காலங்களில் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் தொந்தரவு இல்லாமல் இருந்ததால் தொழிலாளர்கள் அச்சமின்றி வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக காட்டு யானைகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் யானைகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுருத்தி வருவதோடு குடியிருப்புகளை சேதம் செய்து வருகிறது ஒருசில நேரங்களில் யானை மனித மோதல் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் மற்றும் டேன்டீ தேயிலைத்தோட்டம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது.

அரசு தேயிலைத்தோட்டம் கொளப்பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் காட்டு யானைகள் அச்சுருத்தல் காரணமாக தொழிலாளர்கள் தங்கள்  குடியிருப்புகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். அதனால் பல குடியிருப்புகள் பராமரிப்பு இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: