திருவலம் அடுத்த 55புத்தூர் கிராமத்தில் ஆபத்தான மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

திருவலம் :  திருவலம் அடுத்த 55புத்தூர் கிராமத்தில் ஆபத்தான நிலையில்  பயனற்ற மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருவலம் அடுத்த 55புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 55புத்தூர் கிராமத்தில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களது குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில்  மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. காலப்போக்கில் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி முற்றிலும் சேதமடைந்ததால், அதே கிராமத்தில் புதிதாக நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையிலும், காட்சி பொருளாகவும் உள்ளது. எனவே, இந்த பயனற்ற மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: