ஓட்ஸ் கேசரி

தேவையானவை:

ஓட்ஸ் – 1 கப்,

சர்க்கரை – 1 கப்,

நெய் – 100 கிராம்,

முந்திரி, திராட்சை – தலா 10,

கேசரிப் பவுடர் – ஒரு சிட்டிகை,

குங்குமப்பூ – ஒரு சிட்டிகை.

செய்முறை:

ஓட்ஸை வாசனை வரும்வரை வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் ரவைபோல் பொடிக்கவும். பின் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுக்கவும். அதே வாணலியில் 1 கப் நீர்விட்டு கொதித்ததும் ஓட்ஸ் ரவை போட்டு கிளறி வெந்ததும், சர்க்கரை, கேசரி பவுடர் போட்டு கிளறி நெய் சிறிது சிறிதாக ஊற்றி பதம் வந்ததும் குங்குமப்பூ, முந்திரி, திராட்சை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

The post ஓட்ஸ் கேசரி appeared first on Dinakaran.